நிலத்தடி நீர்
கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி போராட்டம் தொழிற்சாலைகளுக்கு
சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுத்துச் செல்லப்படுவதைக் கண்டித்து புதிய தமிழகம்
கட்சியினர் சார்பில் இன்று ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
புதிய தமிழகம்
கட்சித் தலைவரும், ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ.வுமான டாக்டர்.கிருஷ்ணசாமி தலைமையில்
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிலக்கோட்டை எம்.எல்.ஏ. ராமசாமி, பஞ்சாயத்து தலைவர்கள் ஓட்டப்பிடாரம்
மாசானசாமி, புதியம்புத்தூர் பொன்ராஜ், குலசேகரநல்லூர் வேலாயுதசாமி உள்ளிட்டோர்
முன்னிலை வகித்தனர்.
புதியதாக
தொழிற்சாலைகள் அமைக்கும் போது விரிவாக்கம் செய்யும் போதும் கடல் நீரைக் குடிநீராக
மாற்றியும், குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமும் தண்ணீர் பெற்றுக் கொள்வொம்
என்று தொழிற்சாலைக்கான அனுமதியை பெற்றுவிடுகின்றனர். பின்னர் நிலத்தடி நீரை
எடுத்து தேவைகளை சமாளித்து வருகின்றனர்.
இதனால்
தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிளிருந்து விவசாயம் மற்றும்
குடிநீருக்கு பயன்படக் கூடிய நிலத்தடி நீரை உறிஞ்சி ஸ்டெர்லைட், அனல் மின் நிலையங்கள், சீ புட் கம்பெனி உள்ளிட்ட பெரிய
தொழில் நிறுவனங்களுக்கு வணிக நோக்கத்தோடு விற்பனை செய்து வருவதை எதிர்த்து
விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நிலத்தடி நீர்
கொள்ளையைத் தடுத்து நிறுத்த கோரி இன்று ஓட்டப்பிடாரத்தில் நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்தில் பேசிய டாக்டர்.கிருஷ்ணசாமி, "தமிழக முதல்வரிடம் நேரிடையாகவும் இந்த
நிலத்தடி நீர் கொள்ளையை தடுத்து நிறுத்த கோரிக்க வைத்தோம். சட்டசபையிலும் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வந்தோம்.
நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்து நேரிடையாக வாதாடினேன். மாவட்ட நிர்வாகம் உடனடி
நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்.
தமிழக அரசு
நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கனிம வளத்தைப்
பாதுகாக்க இயக்கம் ஆரம்பித்து மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்யும் பணியை புதிய
தமிழகம் செய்யும்” என்றார்.